கால்சைட்டு
Appearance
கால்சைட்டு ஒரு கால்சியம் கார்பனேட்டின் படிக வடிவம்; இது ஒரு தாதுப்பொருள். இது சாய்சதுர அமைப்பில் படிகமாகிறது; பொதுவாக நிறமற்று இருப்பினும், சிவப்பு, இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்திலும் இவை காணப்படுகின்றன. இதன் ஒரு வடிவமான ஐசுலாந்துச் சுண்ணாம்புக்கல்லின் முக்கியப்பண்பு இரட்டை விலகல் ஆகும். இது மிக நிலைப்புத் தன்மை வாய்ந்தது.
கால்சைட்டு ஒரு முக்கியமான பாறை-உருவாக்கும் தாதுப்பொருள். இது சுண்ணாம்புக்கல், பளிங்கு, சுண்ணக்கட்டி ஆகிய பொருள்களின் முக்கிய உட்பொருளாகும். பைஞ்சுதை, சுண்ணம், உரத் தயாரிப்பில் கால்சைட்டு பயன்படுகிறது.
கலைச்சொற்கள்
[தொகு]- சாய்சதுரம் - rhombohedral
- இளஞ்சிவப்பு - pink
- சுண்ணாம்புக்கல் - spar ; limestone
- இரட்டை விலகல் - double refraction
- பளிங்கு - marble
- சுண்ணக்கட்டி - chalk
- பைஞ்சுதை - cement
- சுண்ணம் - lime
படிமங்கள்
[தொகு]-
சிவப்புக் கால்சைட்டு
-
இளஞ்சிவப்புக் கால்சைட்டு
-
மஞ்சள் கால்சைட்டு