[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

கடற்பாலூட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடற்பாலூட்டிகள்[1]
புதைப்படிவ காலம்:55–0 Ma
Early இயோசீன் - Present
Humpback திமிங்கிலம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
உள்வகுப்பு:
பெருவரிசை:
(unranked) Cetartiodactyla
(unranked) Whippomorpha
வரிசை:
சீட்டேசியே

துணைவரிசைகள்

மிஸ்டிசீட்டி
ஓடொண்டோசீட்டி
ஆர்க்கியோசீட்டி (அழிந்துபோயின)
(see text for families)

உயிரியற் பல்வகைமை
[[கடற்பாலூட்டிகள் பட்டியல்|சுமார் 88 இனங்கள்; கடற்பாலூட்டிகள் பட்டியல் அல்லது கீழே பார்க்கவும்.]]

கடற்பாலூட்டி (Cetacea) என்பது, திமிங்கிலங்கள், கடற்பசுக்கள், கடற்பன்றிகள் போன்ற பாலூட்டி வகையைச் சேர்ந்த கடல்வாழ் உயிரின வகையைச் சேர்ந்த ஒரு விலங்கைக் குறிக்கும். தொடக்கத்தில் திமிங்கிலத்தைக் குறித்ததும், பின்னர் பெரிய கடல்வாழ் விலங்குகளைப் பொதுவாகக் குறிப்பதுமான சீட்டேசியே என்னும் இலத்தீனச் சொல் இவற்றின் அறிவியல் பெயர்களில் பயன்படுகின்றது.

கடற்பாலூட்டிகள், நீர் வாழ்வுக்கு இசைவாக்கம் பெற்ற பாலூட்டிகள் ஆகும். இவை இருமுனையும் கூம்பிய உடலமைப்புக் கொண்டவை. முன் கால்கள் நீந்துவதற்கு ஏற்ற வகையில் துடுப்புக்கள் போல் மாற்றம் பெற்றுள்ளன. பின்னங் கால்கள் குறுகி உறுப்பெச்சங்களாகக் காணப்படும். இக் கால்கள் முதுகெலும்புடன் இணைக்கப்படாமல் உடலுக்குள்ளேயே காணப்படுகின்றன. இவற்றில் உடலில் பெரும்பாலும் முடி இருப்பதில்லை. ஆனால், இவற்றில் உடல் தடிப்பான தோலயற்கொழுப்புப் படையினால் காக்கப்படுகின்றது. இவ்விலங்குகள் பொதுவாகப் புத்திக்கூர்மை கொண்டவை எனக் கருதப்படுகின்றன.

சீட்டேசியே (Cetacea) வரிசையில் 90 இனங்கள் உள்ளன. இவற்றுள் நான்கு நன்னீர்க் கடற்பசு இனங்கள் தவிர ஏனையவை கடல் வாழ்வன. இவை, சிறிய கடற்பசுக்கள் முதல் எக்காலத்தும் உலகில் வாழ்ந்த விலங்குகளுள் மிகப் பெரியனவாகக் கருதப்படும் நீலத் திமிங்கிலங்கள் வரை வேறுபட்ட அளவுகளில் காணப்படுகின்றன.

உள்ளமைப்பியல்

[தொகு]
டால்பின் உள்ளமைப்பு

கடற்பாலூட்டிகளின் உடலானது மீன்களை ஒத்ததாக அமைந்துள்ளது. இவ்வமைப்பு அவற்றின் வாழ்க்கை மற்றும் வாழ்விட நிலைமைகள் காரணமாக இருக்கலாம். கடற்பாலுட்டிகளின் உடலானது வாழிடத்திற்கு ஏற்றவாறு தகவைமைப்பைப் பெற்றுள்ளது. மேலும் யூத்தேரியா போன்ற மற்ற உயர் பாலுட்டிகளின் பண்புகளையும் கொண்டுள்ளன.[2]

நீரில் நீந்துவதற்கு ஏற்றவாறு கடற்பாலூட்டிகளின் முன்கைகள் வால்துடுப்புகள் மாற்றமடைந்துள்ளன. முதுகுப்புறத்தில் ஒரு துடுப்பு போன்ற அமைப்பு காணப்படுகிறது. கடற்பாலுட்டி இனங்களைப் பொருத்து இதன் வடிவம் மாறுபடக்கூடும். பெலுகா திமிங்கலத்தில் இத்தகைய அமைப்பு காணப்படுவதில்லை. வால்துடுப்பு மற்றும் மேல் துடுப்பு இரண்டும் நீரில் நிலையாக நீந்திச் செல்வதற்கு ஏற்றாற் போல் அமைந்துள்ளது.

கடற்பாலூட்டிகளின் ஆண் இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் பெண்ணின் பால் சுரப்பிகள் உடலுக்குள் மறைந்து காணப்படுகின்றன.[3][4]

கடற்பாலூட்டியின் தோல் தோலயற்கொழுப்பு (blubber) என்ற ஒரு தடித்த அடுக்கால் மூடப்பட்டுள்ளது. இது வெப்பக் காப்பு அமைப்பாக பயன்படுகிறது. மேலும், மென்மையான சீரான உடல் வடிவம் கொண்டதாகக் காணப்படுகிறது. பெரிய இனங்களில் இந்த கொழுப்பு அடுக்கானது அரை மீட்டர் வரை தடிமனைக் கொண்டிருக்கும்.

பற்களுடைய திமிங்கலங்களில் பால் ஈருருமை தோன்றியுள்ளது. ஆண் உயிரணு திமிங்கலம், அலகுடைய பல திமிங்கல குடும்ப வகைகள், கடற்பன்றி குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு இனங்கள், கொல்லும் திமிங்கலங்கள், பைலட் திமிங்கலங்கள், கிழக்குச் சுழல் டால்பின்கள் ஆகியவற்றில் இப்பண்பு காணப்படுகிறது.[5] ஆண் விலங்குகளுக்கு மற்ற ஆண்களிடையே போட்டியிடுவதற்காக வெளியே தெரியும் படியான பண்புகள் காணப்படுகின்றன. அவை பெண்களில் காணப்படுவதில்லை. உதாரணமாக, ஆண் உயிரணு திமிங்கலங்கள் பெண் திமிங்கலத்தை விட 63% பெரியதாக உள்ளது. பல அலகுடைய திமிங்கலங்கள் பிற ஆண்களுடன் போட்டியிடும் போது தங்களின் அலகுகளைக் காண்பித்து பலத்தை வெளிப்படுத்துகின்றன.[5][6]

உடற்செயலியல்

[தொகு]

குருதியோட்டம்

[தொகு]

கடற்பாலூட்டிகள் திறன்மிக்க இதயத்தைக் கொண்டுள்ளன. குருதியானது உடல் முழுவதும் வலுவாகச் செலுத்தப்படுகிறது. இவை வெப்ப இரத்த விலங்குகளாகும். ஆதலால் உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கின்றன.

மூச்சு

[தொகு]

கடற்பாலூட்டிகளானது நுரையீரல்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு உயிரினமும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மூச்சு விடுவதற்காக நீரின் மேற்பரப்பிற்கு வருகின்றன. இவை தமக்கு தேவையான போது மட்டும் மூச்சு விடுகின்றன. சில நிமிடங்கள் நீரின் மேல்மட்டத்திற்கு வந்து காற்றையும் நீரையும் வெளியேற்றி விட்டு தூய்மையான காற்றை உள்ளிழுத்துக் கொண்டு மறுபடியும் நீரினுள் மூழ்கி விடுகின்றன. இனங்களைப் பொருத்து இக்கால இடைவெளி இரண்டு மணி வரை இருக்கக்கூடும்.

உறுப்புகள்

[தொகு]

கடற்பாலூட்டிகளின் இரைப்பை மூன்று அறைகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதியானது தசைப்பகுதி மற்றும் தளர் சுரப்பிகள் அமைந்த முன் வயிற்றுப்பகுதியாகும். (அலகுடைய திமிங்கலங்களில் இவை காணப்படுவதில்லை). இதனைத் தொடர்ந்து முக்கிய வயிற்றுப்பகுதியும் அடுத்ததாக பைலோரஸ் வயிற்றுப்பகுதியும் அமைந்துள்ளன. இவை இரண்டும் நன்கு கட்டமைக்கப்பட்ட செரிமான சுரப்பிகளைக் கொண்டு காணப்படுகின்றன. நுரையீரல்கள் பெரிதாகவும் பித்த நீர்ப்பையில் இருந்து தனித்தும் உள்ளன.[7]

கடற்பாலுட்டியின் சிறுநீரகமானது நீளமாகவும் தட்டையாகவும் காணப்படுகிறது. கடல் நீரின் உப்பு அளவை விட கடற்பாலூட்டி இரத்தத்திலுள்ள உப்பின் அடர்த்தி குறைவாக உள்ளது. சிறுநீரகம் உப்பினைப் பிரித்தெடுத்து விடுவதால் இவை கடல்நீரினை பருகுகின்றன.[8]

புலன்கள்

[தொகு]

கடற்பாலூட்டிகளின் கண்கள் முன் பக்கம் அமையாமல் பக்கவாட்டில் அமைந்துள்ளன. இதன் மூலம் இவ்வுயிரினங்கள் மேலும் கீழுமாக நல்ல இருவிழிப்பார்வைத் திறனைக் கொண்டுள்ளன. கண்ணீர் சுரப்பி மெழுகு கலந்த கண்ணீரினைச் சுரப்பதால் கண்களை உப்பு நீரிலிருந்து பாதுகாக்கிறது. கண் வில்லை கிட்டத்தட்ட கோள வடிவில் உள்ளது. இவ்வில்லைகள் ஆழமான நீர்ப்பகுதியில் குறைந்த ஒளியில் நன்கு பார்க்கும் வகையில் தகவமைந்துள்ளன. டால்பின்களைத் தவிர மற்ற கடற்பாலூட்டிகள் மங்கிய பார்வைத்திறனை மிகச்சிறப்பான கூர்மை கேட்டல் திறனைக் கொண்டு ஈடுகட்டுகின்றன. கியானா டால்பின் என்ற இனம் மின்னணு ஏற்பிகள் உதவியால் இரை உணவை அடையாளம் கண்டுகொள்கின்றது.[9]

பற்கள்/எலும்புகள்

[தொகு]

பற்களை வெட்டு பற்கள், கோரைப்பல், பின் கடைவாய்ப்பற்கள் என வகைப்படுத்தலாம். மேலும் கடல் உயிரினங்களை உண்பதற்கு ஏற்றவாறு பற்களின் வரிசை அமைப்பு காணப்படுகிறது.

நடத்தை

[தொகு]

நனவுச் சுவாச நிலையிலேயே கடற்பாலூட்டிகள் இயங்குகின்றன. இவை நிண்ட நேரம் உறங்குவதில்லை தூக்கமானது கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. கடற்பாலூட்டிகளின் மூளையின் அரைக்கோளம் ஒரு நேரத்தில் விழித்திருந்தால் மறு அரைக்கோளம் உறங்குகிறது. இந்த உறக்க நிலையில் நனவு நிலையில் நீந்தம் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அதே போல மற்ற கடற்பாலூட்டிகளுடன் சமூகத் தொடர்பு கொள்வதற்காகவும், எதிரி உயிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள அரை தூக்க நிலையிலும் விழிப்புடன் செயல்படுகின்றன.[10]

2008 ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் படி ஸ்ப்பெர்ம் திமிங்கிலங்கள் கடல் மேற்பறப்பில் செங்குத்தாக உறங்குகின்றன. இ்வ்வுறக்க நிலையில் கடற்கரப்பில் அவ்வழியே கடந்து செல்லும் கப்பல்கள் தொடாத வரையில் அவை எழுப்பும் ஒலிகளுக்கு எவ்வித எதிர்வினையையும் ஆற்றாமல் சலனமற்று இருக்கின்றன. .[11]

நீரில் மூழ்குதல்

[தொகு]

கடற்பாலுட்டிகளானது நீரில் மூழ்கும் (diving) போது பிராணவாயு எடுத்துக்கொள்வது குறைவதால் இதயத் துடிப்பும் இரத்த ஓட்டமும் குறைகிறது. இந்த நிலையில் உடல் உறுப்புகளும் பிராணவாயு எடுத்துக் கொள்வதை குறைத்துக்கொள்கின்றன. முதுகுத் துடுப்புடைய திமிங்கிலங்கள் 40 நிமிடங்கள் வரை நீரில் மூழ்குகின்றன. ஸ்பெர்ம் திமிங்கலங்கள் 60 முதல் 90 நிமிடங்கள் வரை நீரில் மூழ்குகின்றன. பாட்டில் மூக்கு திமிங்கலங்கள் இரண்டு மணி வரை நீரில் மூழ்கி இருக்கின்றன. நீரில் மூழ்கும் ஆழமானது சராசரியாக 180 மீட்டர் (330 அடி) ஆழம் வரை இருக்கும். ஸ்பெர்ம் திமிங்கலங்களின் முழ்கும் ஆழமானது 3000 மீட்டர் (9000 அடி) ஆழத்திலும் பொதுவாக 1,200 மீட்டர் (3,900 அடி) ஆழமாக இருக்கும்.[12][13]

சமூகத் தொடர்புகள்

[தொகு]

பல திமிங்கலங்கள் சமூக விலங்குகளாகும். இருப்பினும் சில இனங்கள் சோடியாகவும் அல்லது தனியாகவும் வாழ்கின்றன. திமிங்கல கூட்டமானது சில வேளைகளில் பத்து முதல் ஐம்பது எண்ணிக்கையில் காணப்படுகின்றன. உணவு கிடைத்தல், இனச்சேர்க்கை ஆகிய காரணிகளைப் பொறுத்து இவற்றின் எண்ணிக்கையில் மாறுபடக்கூடும். இவ்வேளைகளில் ஆயிரம் திமிங்கலங்கள் கொண்ட கூட்டமாகக் கூட உருவாகக் கூடும்.[14]

கடற்பாலூட்டிகளில் அடுக்கதிகாரம் கானப்படுகிறது. கடித்தல், தள்ளுதல், திமித்தல் ஆகியவற்றின் மூலம் தத்தமது அதிகாரங்களை செலுத்துகிறது. விலங்கினக் கூட்டத்தில் மன அழுத்தம், உணவு கிடைக்காமை போன்ற சூழ்நிலைகளில் மட்டுமே மூர்க்கத் தனமாக நடந்து கொள்கின்றன. மற்ற நேரங்களில் இவை அமைதியான சுபாவ நடத்தை உடையவையாகவே கானப்படகின்றன. இவற்றில் வியைாட்டுத் தனங்கள் கானப்படும். காற்றில் குதித்தல், குட்டிக்கரணம் போடுதல், அலைச் சறுக்கு, துடுப்பு அடித்தல் போன்ற நடத்தைகள் பொதுவாகக் கானப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mead, J.G.; Brownell, R. L. Jr. (2005). "Order Cetacea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 723–743. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494. {{cite book}}: Invalid |ref=harv (help)
  2. Groves; Colin; Grubb, Peter (2011). "Ungulate taxonomy". JHU Press. 
  3. J.G.M. Thewissen (11 November 2013). The Emergence of Whales: Evolutionary Patterns in the Origin of Cetacea. Springer Science & Business Media. pp. 383–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4899-0159-0.
  4. Debra Lee Miller (6 January 2007). Reproductive Biology and Phylogeny of Cetacea: Whales, Porpoises and Dolphins. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-4257-7.
  5. 5.0 5.1 Dines, James; Mesnick, Sarah; Ralls, Katherine; May-Collado, Laura; Agnarsson, Ingi; Dean, Matthew (2015). "A trade-off between precopulatory and postcopulatory trait investment in male cetaceans". Evolution 69 (6): 1560–1572. doi:10.1111/evo.12676. பப்மெட்:25929734. 
  6. Dalebout, Merel; Steel, Debbie; Baker, Scott (2008). "Phylogeny of the Beaked Whale Genus Mesoplodon (Ziphiidae: Cetacea) Revealed by Nuclear Introns: Implications for the Evolution of Male Tusks". Systematic Biology 57 (6): 857–875. doi:10.1080/10635150802559257. பப்மெட்:19085329. https://archive.org/details/sim_systematic-biology_2008-12_57_6/page/857. 
  7. C. Edward Stevens; Ian D. Hume (1995). Comparative Physiology of the Vertebrate Digestive System. University of Cambridge. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-44418-7. பார்க்கப்பட்ட நாள் 5 September 2015.
  8. Clifford A. Hui (1981). "Seawater Consumption and Water Flux in the Common Dolphin Delphinus delphis". Chicago Journals (San Diego) 54: 430. 
  9. Morell, Virginia (July 2011). "Guiana Dolphins Can Use Electric Signals to Locate Prey". Science. American Association for the Advancement of Science (AAAS). Archived from the original on 2013-05-30.
  10. Sekiguchi, Yuske; Arai, Kazutoshi; Kohshima, Shiro (21 June 2006). "Sleep behaviour". Nature 441: E9–E10. doi:10.1038/nature04898. Bibcode: 2006Natur.441E...9S. http://www.nature.com/nature/journal/v441/n7096/abs/nature04898.html. 
  11. Miller, P. J. O.; Aoki, K.; Rendell, L. E.; Amano, M. (2008). "Stereotypical resting behavior of the sperm whale". Current Biology 18 (1): R21–R23. doi:10.1016/j.cub.2007.11.003. பப்மெட்:18177706. 
  12. Scholander, Per Fredrik (1940). "Experimental investigations on the respiratory function in diving mammals and birds". Hvalraadets Skrifter (Oslo: Norske Videnskaps-Akademi) 22. 
  13. Bruno Cozzi; Paola Bagnoli; Fabio Acocella; Maria Laura Costantino (2005). "Structure and biomechanical properties of the trachea of the striped dolphin Stenella coeruleoalba: Evidence for evolutionary adaptations to diving". The Anatomical Record 284 (1): 500–510. doi:10.1002/ar.a.20182. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/ar.a.20182/full. பார்த்த நாள்: 5 September 2015. 
  14. Janet Mann; Richard C. Connor; Peter L. Tyack; et al. (eds.). Cetacean Societies: Field Study of Dolphins and Whales. University of Chicago.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடற்பாலூட்டி&oldid=3733583" இலிருந்து மீள்விக்கப்பட்டது