1676
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1676 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1676 MDCLXXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1707 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2429 |
அர்மீனிய நாட்காட்டி | 1125 ԹՎ ՌՃԻԵ |
சீன நாட்காட்டி | 4372-4373 |
எபிரேய நாட்காட்டி | 5435-5436 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1731-1732 1598-1599 4777-4778 |
இரானிய நாட்காட்டி | 1054-1055 |
இசுலாமிய நாட்காட்டி | 1086 – 1087 |
சப்பானிய நாட்காட்டி | Enpō 4 (延宝4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1926 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4009 |
1676 (MDCLXXVI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 29 - மூன்றாம் பியோதர் உருசியாவின் பேரரசனாக முடி சூடினார்.
- பெப்ரவரி 10 - மாசச்சூசெட்ஸ் லான்காஸ்டர் நகரைத் தாக்கிய நிப்முக் பழங்குடியினர் மேரி ரோலண்ட்சன் என்ற ஆங்கிலேயக் குடியேறியைச் சிறைப் பிடித்துச் சென்று மே மாதம் வரை வைத்திருந்தனர்.
- மார்ச் 29 - பிராவிடென்ஸ் இந்தியப் பழங்குடியினரால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
- மே 26 - இங்கிலாந்து, சவுத்வார்க் நகர மண்டபம் தீப்பிடித்து அழிந்தது, 624 வீடுகளும் எரிந்து சேதமாயின.
- சூன் 19 - தம்மிடம் சரணடையும் இந்தியப் பழங்குடிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுமென மாசச்சூசெட்ஸ் நிருவாகம் அறிவித்தது.
- சூலை 2 - கனெடிகட், றோட் தீவு ஆகிய இடங்களில் பெருமளவு ஆல்கோன்கியன் பழங்குடிகள் சிறைப் பிடிக்கப்பட்டு 13 குடியேற்றங்களுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
- சூலை 27 - பாஸ்டனில் கிட்டத்தட்ட 200 நிப்முக் பழங்குடியினர் சரணடைந்தனர்.
- ஆகத்து 12 - நியூ இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் குடியேறிகளுக்கு எதிராகப் போரில் ஈடுபட்ட வம்பனோகுசு பழங்குடியினரின் தலைவர் "பிலிப்பு மன்னன்" ஆல்டர்மான் என்ற பழங்குடி இந்தியனால் கொல்லப்பட்டார்.
- செப்டம்பர் 19 - ஜேம்சுடவுன் நேத்தானியல் பேக்கனின் படையினரால் முற்றாக எரிக்கப்பட்டது.
- அக்டோபர் 17 - உதுமானியப் பேரரசுக்கும் போலந்து-லித்துவேனியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- டிசம்பர் - ஓலி ரோமர் ஒளியின் வேகத்துக்கான முதலாவது அளவீட்டை அறிவித்தார்.
- உருசிய-துருக்கி போர் ஆரம்பமானது.
- எதியோப்பியாவில் முசுலிம்கள் கிறித்தவர்களுடன் கலக்காமல் தனியாக வசிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது.
- ஆன்டன் வான் லீவன்ஹூக் நுண்ணுயிரிகளைக் கண்டுபிடித்தார்.
- பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி புதுச்சேரியில் கோரமண்டல் கரையில் புதிய தளம் ஒன்றை அமைத்தனர்.
- யோசப் வாசு அடிகள் கோவா பேராயரினால் குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.[1]
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 4