சான் கிளவுசர்
சான் கிளவுசர் John Clauser | |
---|---|
2016 இல் சான் கிளவுசர் | |
பிறப்பு | சான் பிரான்சிசு கிளவுசர் திசம்பர் 1, 1942 பாசடீனா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
துறை | குவாண்டம் இயங்கியல் |
பணியிடங்கள் | லாரன்சு பெர்க்க்கிலி தேசிய ஆய்வுகூடம் லாரன்சு லிவர்மோர் தேசிய ஆய்வுகூடம் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) |
கல்வி கற்ற இடங்கள் | கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் (இ.அ) கொலம்பியா பல்கலைக்கழகம் (முதுகலை, முனைவர்) |
ஆய்வேடு | விண்மீனிடைவெளி மூலக்கூறுகளின் ஒளி அவதானிப்புகள் மூலம் அண்ட நுண்ணலைப் பின்னணியை அளவிடுதல் (1970) |
ஆய்வு நெறியாளர் | பத்திரிக்கு தாடியசு |
அறியப்படுவது | பெல் மாதிரி சோதனைகள், CHSH சமனின்மை |
விருதுகள் |
|
இணையதளம் johnclauser.com |
சான் பிரான்சிசு கிளவுசர் (John Francis Clauser; பிறப்பு: திசம்பர் 1, 1942) என்பவர் அமெரிக்க கோட்பாட்டு, செய்முக இயற்பியலறிஞர் ஆவார். இவர் குவாண்டம் இயங்கியலின் அடித்தளப் பங்களிப்புகளுக்காக அறியப்பட்டவர்.[1] "சிக்கலான போட்டான்கள் பற்றிய சோதனைகள் மூலம், பெல் சமனின்மைகளை மீறுதல், குவாண்டம் தகவல் அறிவியலுக்கு ஆற்றிய பங்களிப்பு" ஆகியவற்றுக்காக இவருக்கும் அலைன் ஆசுபெக்ட், அன்டன் சைலிங்கர் ஆகியோருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[2]:{{{3}}}
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]கிளவுசர் கலிபோர்னியாவில் பாசடீனாவில் பிறந்தார். இவர் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டத்தை 1964 ஆம் ஆண்டில் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் பெற்றார்.[3] கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டத்தை 1966 இலும், 1969 இல் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.[1][4][5]
1969 முதல் 1996 வரை, இவர் லாரன்சு பெர்க்கிலி தேசிய ஆய்வுகூடம், லாரன்சு லிவர்மோர் தேசிய ஆய்வுகூடம், பெர்க்கிலி கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றினார்.[1] 1972 இல், இசுட்டுவர்ட் பிரீடுமேன் என்பவருடன் இணைந்து CHSH-பெல் தேற்றத்தின் கணிப்புகளுக்கான முதலாவது பரிசோதனையை மேற்கொண்டார். இதன் மூலம் பெல் சமனின்மை பற்றிய முதலாவது செய்முக அவதானிப்பு பெறப்பட்டது.
1974 ஆம் ஆண்டில், மைக்கேல் ஆர்ன் என்பவருடன் பணியாற்றி, பெல் தேற்றத்தின் பொதுமைப்படுத்தல் இயற்கையின் அனைத்து உள்ளூர் யதார்த்தக் கோட்பாடுகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை வழங்குகிறது என்பதை முதன்முதலில் காட்டினார். இந்த ஆய்வு முடிவுகள் கிளவுசர்-ஆர்ன் (CH) சமனின்மையை அறிமுகப்படுத்தியது. இது "CH மேம்படுத்தல்-அல்லாத அனுமானத்தையும்" அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு CH சமனின்மை CHSH சமனின்மைக்கு குறைந்தது. 1974 ஆம் ஆண்டில், அவர் ஒளிக்கான துணை-பாயிசோனியன் புள்ளிவிவரங்களின் முதலாவது அவதானிப்பை (தொன்மைசார் மின்காந்தப் புலங்களுக்கான Cauchy-Schwarz சமனின்மையை மீறுவதன் மூலம்) மேற்கொண்டார். அதன் மூலம், முதல் முறையாக, ஒளியணுக்களுக்கு ஒரு தெளிவற்ற துகள் போன்ற தன்மையை விளக்கினார். 1976 இல் அவர் CHSH-பெல் தேற்றக் கணிப்புகளின் இரண்டாவது சோதனையை மேற்கொண்டார்.
கிளவுசர் 2010 இற்கான இயற்பியல் வுல்ஃப் பரிசை அலைன் ஆசுபெக்ட், அன்டன் சைலிங்கருடன் இணைந்து பெற்றுக் கொண்டார். இம்மூவருக்கும் 2022 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "John F. Clauser". American Institute of Physics.
- ↑ (October 4, 2022). "The Nobel Prize in Physics 2022". செய்திக் குறிப்பு.
- ↑ The Big T. Associated Students of the California Institute of Technology. 1963.
- ↑ Clauser, John F. (1970). Measurement of the Cosmic Microwave Background by Optical Observations of Interstellar Molecules (Ph.D. thesis). கொலம்பியா பல்கலைக்கழகம். இணையக் கணினி நூலக மைய எண் 145659. ProQuest 302516464.
- ↑ "Patrick Thaddeus (1932–2017)" (PDF). Biographical Memoirs. National Academy of Sciences. p. 12.
- ↑ "The Nobel Prize in Physics 2022". NobelPrize.org. பார்க்கப்பட்ட நாள் October 4, 2022.